கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக உணவில் கெமிக்கலை கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி: மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் கைது
2022-12-04@ 16:44:12

மும்பை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது கணவன் சாப்பிடும் உணவில் கெமிக்கலை கலந்து கொடுத்து கொன்ற மனைவியை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மாயநகரி பகுதியை சேர்ந்த கமல்காந்த் என்பவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அவரது மனைவி கவிதா, மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 19ம் தேதி இறந்தார்.
கமல்காந்தின் திடீர் மரணம் குறித்த மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால், அவரது ரத்த மாதிரிகளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி இருந்தனர். தற்போது அதன் அறிக்கை கிடைத்துள்ளது. அதில், கமல்நாத்தின் ரத்தத்தில் ஆர்சனிக் போன்ற உலோகத்தின் (கெமிக்கல்) அளவு அதிகமாக இருந்தது. இந்த உலோகம் தான், கமல்நாத்தை கொன்றிருக்கும் என்பதை உறுதி செய்தனர். அதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக ஆசாத் மைதான காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வழக்குப் பதிவு செய்து, மேல் விசாரணைக்காக சாண்டாகுருஸ் குற்றப்பிரிவு போலீசிடம் வழக்கை ஒப்படைத்தனர். இவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளது.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் கட்டாலே கூறுகையில், ‘கமல்காந்தின் மனைவி கவிதா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கமல்நாத்தின் மனைவி கவிதா, வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு கமல்நாத் இடையூறாக இருந்ததால் அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன் அடிப்படையில் கமல்காந்த் சாப்பிடும் உணவு மற்றும் குளிர்பானத்தில் ஆர்சனிக் என்ற உலோகத்தை கலந்து கொடுத்துள்ளார். இந்த உலோகம் உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து விஷமாக மாறியது. இரண்டு வாரங்களுக்கு பின்னர், அந்த கெமிக்கல் வேலை செய்ய ஆரம்பித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்நாத், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது மரணத்தில் மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது அதன் முடிவுகள் வந்துள்ளதால், கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், அவருக்கு கெமிக்கல்லை கொடுத்து கவிதா கொன்றுள்ளார். தற்போது அவரையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி