தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-12-04@ 11:34:52

சென்னை: தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 ஆம் தேதி கனமழையும், 8 ஆம் தேதி மிகக் கனமழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ந்தேதி வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அருகில் நிலவக்கூடும்.
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், வடக்கு உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி