கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
2022-12-04@ 02:37:10

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தினமும் லாரிகளில் பூக்கள் வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு கிலோ மல்லி ரூ.1,300க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும், முல்லை ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், அரளி ரூ.200க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும், சம்பங்கி ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும், அரளி 200க்கும், சாமந்தி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபற்றி பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘‘இன்று மற்றும் நாளை முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மடங்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் முடிந்தவுடன் பூக்கள் விலை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திகை தீபம் என்பதால் சாமந்தி, பன்னீர் ரோஸ், சாக்லெட் ரோஸ் ஆகிய பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!