வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடி கஞ்சா பறிமுதல்
2022-12-03@ 00:47:16

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செருதூர் வெள்ளையாற்றின் கரையோரம் நிறுத்தி இருந்த படகை எடுப்பதற்காக 3 பேர் வந்தனர். சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், படகு அருகே சென்ற போது தப்பியோடி முயன்ற 3பேரை விரட்டி சென்று பிடித்தனர்.
விசாரணையில், மீனவர் சந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதும், அவர்கள் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அருளழகன்(23), காஞ்சிநாதன்(27), நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால்(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் படகை சோதனை செய்த போது, ஐஸ்பெட்டியில் 9 மூட்டைகளில் 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களது வீடு மற்றும் படகு உரிமையாளர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!