தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
2022-12-02@ 00:28:29

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள உறுப்பினர் பதவியை நிரப்புவதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில், அரசு தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரும் 17ம் தேதி மாலை 6 மணி வரை வரவேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இணையதள முகவரி http://www.tn.gov.in/ department/7 ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tags:
Tamil Nadu Electricity Regulatory Commission Member Post Apply தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பதவி விண்ணப்பிக்கலாம்மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!