நடிகர் ராஜ்கிரன் வளர்ப்பு மகள் முசிறி காவல் நிலையத்தில் ஆஜர்
2022-12-02@ 00:28:10

முசிறி: முசிறி காவல் நிலையத்தில் நடிகர் ராஜ்கிரன் வளர்ப்பு மகள் கணவருடன் நேற்று ஆஜரானார். திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி(47). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பத்மஜோதி, கணவரை பிரிந்து மகள் பிரியாவுடன் சென்னைக்கு சென்றார். அப்போது நடிகர் ராஜ்கிரணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்தனர். இதையடுத்து, பத்மஜோதி என்கிற பெயரை கதீஜா ராஜ்கிரண் என்றும், மகள் பிரியாவின் பெயரை ஜனத்பிரியா(30) என்றும் மாற்றிக்கொண்டனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஜனத்பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜா(34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து ஜனத்பிரியா, தனது தந்தை இளங்கோவன் கொடுத்த நகைகளை தாயிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கதீஜா ராஜ்கிரண், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் கணவர் ராஜ்கிரன் மீது அவதூறாக பேசியதோடு, குடும்ப நகையை எடுத்து சென்றதால் பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். தற்போது பிரியா, கணவருடன் துறையூரில் தந்தை வீட்டில் வசித்து வருவதால், முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இதற்காக ஜனத்பிரியா, கணவர் முனீஸ்ராஜாவுடன் முசிறி காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். கதீஜா ராஜ்கிரண் ஆஜராகவில்லை. தொடர்ந்து, இருதரப்பையும் இன்று (2ம்தேதி) நேரில் ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:
Actor Rajkiran foster daughter at Musiri Police Station Ajar நடிகர் ராஜ்கிரன் வளர்ப்பு மகள் முசிறி காவல் நிலையத்தில் ஆஜர்மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி