SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமண மசோதா நிறைவேற்றம்

2022-12-01@ 17:26:24

வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில், ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செனட் சபையில் மேற்கண்ட மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதன்பின் ஜனாதிபதி ஜோ பிடன் அந்த மசோதாவில்  கையெழுத்திட்டதும் சட்டமாக அமல்படுத்தப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்