ஆஸி.க்கு எதிரான ஹாக்கி தொடர் இந்தியாவுக்கு முதல் வெற்றி
2022-12-01@ 01:05:36

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஹாக்கி டெஸ்டில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 5-4, 2வது ஆட்டத்தில் 7-4 என்ற கோல் கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க, 3வது ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அபாரமாக விளையாடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (11வது நிமிடம்), அபிஷேக் (47’), ஷம்ஷெர் சிங் (57’), அக்ஷ்தீப் சிங் (60வது நிமிடம்) கோல் போட்டனர். ஆஸி. வீரர்கள் ஜாக் வெல்ச் (25’), கேப்டன் ஆரன் ஸலேவ்ஸ்கி (32’), நாதன் எப்ராமஸ் (59’) ஆகியோர் கோல் அடித்தனர்.தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்த நிலையில், எஞ்சிய 2 ஆட்டங்கள் டிச. 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளன.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்ப்பார் என தகவல்
சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தது: 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு.! ஜடேஜாவுக்கு சம்பள உயர்வு.! புவனேஷ்குமார் பட்டியலில் இருந்து நீக்கம்
தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்
மகளிர் பிரிமியர் லீக் பைனல் மும்பைக்கு 132 ரன் இலக்கு
2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அசத்தல்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்