SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி-யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் தீயில் கருகி பலி

2022-11-30@ 15:36:47

பிரோசாபாத்: உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் பதம் நகரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நகைக் கடை உரிமையாளரான ராமன் குமார் என்பவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், தீவிபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் விரைந்து வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்