SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் அருகே 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் எருக்கூர் அரசு பள்ளி: மேம்படுத்த பெற்றோர் வலியுறுத்தல்

2022-11-30@ 12:25:51

கொள்ளிடம்:கொள்ளிடம் அருகே 5 குழந்தைகள் படித்து வரும் எருக்கூர் அரசு பள்ளியை மேம்படுத்த பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் அரசூர், எருக்கூர், மணலகரம், காப்பியகுடி, சேந்தங்குடி, பட்ட விளாகம், கீழமாத்தூர், புத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வந்து கல்வி பயின்று வந்தனர். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

கடந்த பத்து வருட காலங்களில் இப்பள்ளியில் குழந்தைகளின் எண்ணிக்கை 100லிருந்து வெகுவாக குறைந்து சென்ற வருடம் இரண்டு குழந்தைகள் மட்டுமே இங்கு கல்வி பயின்றனர்.இந்த வருடம் மேலும் மூன்று குழந்தைகள் சேர்ந்து மொத்தத்தில் ஐந்து குழந்தைகள் மட்டுமே இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவரும், இங்குள்ள சத்துணவு மையத்துக்கு மற்றொரு பள்ளியில் வேலை பார்க்கும் சத்துணவு அமைப்பாளர் இங்கு கூடுதல் பொறுப்பாளராகவும் இருந்து பணியாற்றி வருகிறார்.

மிகவும் பழமையான ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரையினால் வேயப்பட்ட இந்த கட்டிடம் இன்றும் நல்ல முறையில் பழமை மாறாமல் உள்ளது.ஆனால் இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து ஐந்து மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அப்பகுதியில் கடந்த 5 முதல் 8 அல்லது 10 ஆண்டுகளில் துவக்கப்பட்ட சில தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகமாகி உள்ளது. ஆனால் எருக்கூரில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவில்லை. இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை படுபாதாளத்திற்கு சரிந்து தற்போது வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். எனவே இந்த துவக்க பள்ளியை மேம்படுத்தியும், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கல்வி தரத்தையும் உயர்த்த அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆசிரியர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து மேலும் இப்பள்ளியின் வளர்ச்சியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்று வட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்