SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா நகர் பகுதியில் நாளை முதல் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்; போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

2022-11-30@ 00:58:46

சென்னை: அண்ணாநகர் பகுதியில் நாளை முதல் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: திருமங்கலம் 100 அடி சாலையையும், அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலையையும் இணைக்கும் 6வது நிழற்சாலையில், துணை மின்நிலையம்  அருகே சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் மாநகராட்சி மூலம் நாளை முதல் 14ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்ட பணிகள் வரும் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும்போது அந்த பகுதியில கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காவல்நிலைய சந்திப்பிலிருந்து திருமங்கலம் 100 அடி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் 6வது நிழற்சாலை ‘‘X” 5வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ‘‘Z” பிளாக் 13வது தெரு வழியாக 6வது நிழற்சாலையை அடைந்து 100 அடி சாலையை நோக்கி செல்லவேண்டும்.

திருமங்கலம் 100 அடி சாலையிலிருந்து கே4 காவல்நிலைய சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் 6வது நிழற்சாலையிலேயே செல்லலாம். மேலும் வரும் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறும் போது திருமங்கலம் 100 அடி சாலையிலிருந்து கே4 காவல்நிலைய சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் 6வது நிழற்சாலை X  ‘‘G” பிளாக் 14 வது தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ‘‘Z 13வது தெரு வழியாக 6வது நிழற்சாலை அடைந்து மு4 காவல்நிலைய சந்திப்பை அடையவேண்டும். கே4 காவல் நிலைய சந்திப்பிலிருந்து திருமங்கலம் 100 அடி சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் 6வது நிழற்சாலையிலேயே செல்லலாம். மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமான பணிகளுக்காக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களுக்கு, வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் ஒத்துழைப்பை வழங்கி, சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்