SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகை ஷோபிதாவுடன் நாக சைதன்யா வெளிநாடு டூர்

2022-11-30@ 00:58:10

ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலா ஜோடியாக வெளிநாடு டூர் சென்றுள்ளனர். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தா காதலித்து மணந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் தோழி வானதியாக நடித்தவர் நடிகை ஷோபிதா துலிபாலா. இந்நிலையில் ஷோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல் பரவியது. இதை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு இந்த ஜோடி பறந்து சென்றுள்ளது.

அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. ஷோபிதாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல் வெளியானபோது, சமூக வலைத்தளத்தில் அப்படியெல்லாம் இல்லை என பதிவு செய்தவர் சமந்தா. அப்போது அவர் நாக சைதன்யாவை பிரிந்துவிட்டார். ஆனாலும் அவரது காதல் விவகாரத்தில் தலையிட்டதற்காக நெட்டிசன்கள் பலரும் சமந்தாவை கண்டித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்