ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை
2022-11-29@ 14:39:27

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி; உயர்கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் உயர்கல்வித்துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறையின் 382 கட்டிட பணிகளுக்காக ரூ.422.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த பணிகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை மாநில கல்லூரியில் கூட்ட அரங்கம் ரூ.63 கோடி செலவில் கட்டப்படும் என்றும், மாற்றுத்திறனாளிக்கான விடுதியும் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்தார். இவற்றுக்கான திட்ட வரையறையையும், நிதி ஒதுக்கீட்டையும் பெற்று வரும் டிசம்பருக்குள் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. சென்னை ராணிமேரி கல்லூரியில் பி.எச்டி. மாணவியர் விடுதி ரூ.42 கோடி செலவில் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த பணிகளுக்கான முயற்சிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. மேலும், 20 கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், கட்டிடமே கட்டப்படாமல் இருந்த 6 கல்லூரிகள் என 26 கல்லூரிகளுக்கான கட்டிட பணிகளில் 10 பணிகள் நடைபெறுகின்றன.
இன்னும் 10 கட்டிடங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் இந்த பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதா குறித்து பேச கவர்னரிடம் சட்டத்துறை அமைச்சர் நேரம் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு கூட அனுமதி கிடைக்காத சூழ்நிலை இருக்கிறது. இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அவசர சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் கிடைத்தது. ஆனால் அதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. அதில் கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் அரசு பதில் அளித்த பிறகும் இதுவரை ஒப்புதல் தரப்படவில்லை.
என்றாலும், அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த இடங்களையும் காலியாக வைத்திருக்கக்கூடாது என்பதுதான் அடிப்படை நோக்கம். காலியிடங்களில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வந்தால் அதை பரிசீலித்து மாணவர்களின் தேவை நிறைவு செய்யப்படும். இடமாறுதலுக்கு 580 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். நிரந்தர பணியில் உள்ள பேராசிரியர்கள்தான் கவுன்சிலிங்கிற்கு வரவேண்டும் என்று முதலில் கூறியிருந்தோம். பின்னர் கவுரவ விரிவுரையாளர்களும் இதற்கான கோரிக்கையை வைத்தனர். எனவே பேராசிரியர் கவுன்சிலிங் முடிந்த பிறகு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்