SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் 500 குழந்தைகளுக்கு சிற்றுண்டி

2022-11-29@ 14:12:55

திருவள்ளூர்: திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்படி, திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா ஆதரவற்ற குழந்தைகள் 500 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் சே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், ஒன்றிய அவை தலைவர் க.ஜெயராமன், துணை செயலாளர்கள் ஞா.ரமேஷ், மு.ராஜா, மகேஸ்வரி பாலவிநாயகம், ஒன்றிய பொருளாளர் குட்டி (எ) பக்தவச்சலு, மாவட்ட பிரதிநிதிகள் இ.என்.சேகர், ஆர்.திலீப்ராஜ், ப.இம்மானுவேல் முன்னிலை வகித்தனர். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சேவாலயா ஆதரவற்ற குழந்தைகள் 500 பேருக்கு காலை உணவு வழங்கினார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் பொன்.விமல்வர்ஷன், வழக்கறிஞர் ஆர்.எஸ்.ராஜராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் வ.ஹரி, ஆர்.ராஜி, மோத்தீஷ் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்