அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
2022-11-29@ 12:09:35

டெல்லி: அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்தது. தடையை நீட்டித்து வழக்கு விசாரணையை நவம்பர் 30-க்கு உச்சநிதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பன்னீர்செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் என்பது சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலை என்னவாக இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்.
கட்சிக்கான பொதுக்குழு தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடையானது நீட்டிக்கபட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!