கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜவுக்கு நன்கொடை; குஜராத் சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறுமா?: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
2022-11-29@ 00:46:20

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் மாநிலத்திற்காக தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடை ரூ.174 கோடி. இதில் பாஜவுக்கு மட்டும் ரூ.163 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 94 சதவிகிதம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்ற காரணத்தால் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பண பலத்தோடு, அதிகார பலமும் சேர்ந்து சுயேட்சையாக, நியாயமாக தேர்தல் நடைபெற முடியாத சூழலை பாஜ உருவாக்கியிருக்கிறது.
மோடி அரசு இத்தகைய நன்கொடைகளின் மூலம் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. இதன்மூலம் தேர்தல் நடைமுறைகளையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்திருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் துணை போய்க் கொண்டிருகிறது. இத்தகைய அநீதிகளை எதிர்த்து தான் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் பொதுமக்களை திரட்டி பாஜ ஆட்சிக்கு எதிராக ஆதரவை திரட்டி வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
நெல்லிக்குப்பம் கிராமத்தில் நெல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
வழக்கறிஞர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா இன்று தொடக்கம்: ஏப்ரல் 3ம் தேதி தேரோட்டம்
வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000: வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்; சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கும் புதிய திட்டம்: மேயர் பிரியா அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்