SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி-திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார்

2022-11-28@ 14:31:27

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் மாநில செயலாளர் ரவி தலைமையில் திருப்பதி  அலிபிரி  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சின்ன ரெட்டப்பாவிடம் தெலுங்கு தேச கட்சி சந்திரபாபுவை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய வேண்டும் என நேற்று புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரவி கூறுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு பற்றி அனந்தபூர் மாவட்ட எம்எல்ஏ சகோதரர் சந்திரசேகர் எனும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி தரக்குறைவாக பேசி உள்ளார். தெலுங்கு தேச கட்சி பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் லோகேஷ் நடத்த உள்ள பாதயாத்திரையை சீர்குலைக்கும் நோக்கோடு சதி திட்டங்கள் செயல்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.  

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேச கட்சியை நிர்வாகிகள் மீதும் அதன் தலைவர்களின் மீதும் மிரட்டும் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்