SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

2022-11-28@ 01:09:47

சென்னை: திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்களை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
திமுக சட்டதிட்ட விதி 26- பிரிவு 1ன்படி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உள்ளனர்.

இவர்களுடன் ஆற்காடு நா.வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதி மாறன் எம்.பி, சுப.தங்கவேலன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கரூர் கே.சி.பழனிசாமி, கோவை மு. கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  பொன்.முத்துராமலிங்கம், திருச்சி சிவா, எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன், மு.பெ.சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு எம்.கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்