திமுக தலைமை கழக நிர்வாகிகள் விவரம்: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
2022-11-28@ 01:03:08

சென்னை: திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமைப்பு செயலாளராக ஆர்.எஸ்.பாரதி, விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக சட்டத்துறை, தலைமை கழக வழக்கறிஞர்கள், தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
திமுக சட்ட திட்ட விதிகளின்படி தலைமைக் கழக நிர்வாகிகள், குழு தலைவர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களாகவும் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
திமுக அமைப்புச் செயலாளர்-ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, இணை அமைப்புச் செயலாளர்-அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள்- முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், ப.தாயகம் கவி எம்.எல்.ஏ. தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர்-வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி, திமுக சட்டத் துறை தலைவர்-வழக்கறிஞர் ஆர்.விடுதலை, சட்டத் துறைச் செயலாளர்-வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி, சட்டத்துறை இணைச் செயலாளர்கள்-இ.பரந்தாமன் எம்.எல்.ஏ, வீ.கண்ணதாசன், என்.மணிராஜ், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன்(கண்ணன்), அருள்மொழி, சட்டத் துறை துணைச் செயலாளர்கள்-ஜெ.பச்சையப்பன், கே.சந்துரு, பட்டி ஜெகன்னாதன், வி.வைத்தியலிங்கம், எஸ்.தினேஷ். தலைமைக் கழக வழக்கறிஞர்கள்-ப.கணேசன், சூர்யா வெற்றிகொண்டான், கே.ஜெ.சரவணன், வீ.கவிகணேசன், எம்.எல்.ஜெகன், ஏ.என்.லிவிங்ஸ்டன், கே.மறைமலை.
கொள்கை பரப்புச் செயலாளர்கள்-திருச்சி சிவா எம்.பி, திண்டுக்கல் ஐ.லியோனி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, சபாபதிமோகன். கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கள்-நெல்லிக்குப்பம் புகழேந்தி, வி.சி.சந்திரகுமார். கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்-வேலூர் டாக்டர் விஜய், பி.ஆர்.சுந்தரம், கம்பம் இரா.பாண்டியன், குத்தாலம் அன்பழகன், கரூர் முரளி, வி.பி.ஆர்.இளம்பரிதி, ச.அ.பெருநற்கிள்ளி, குடியாத்தம் குமரன், ஆரணி வெ.அன்புவாணன், வேலூர் ரமேஷ், சேர்க்காடு கென்னடி.
தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள்-துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம். தொழிலாளர் அணிச் செயலாளர்-பிடிசி ஜி.செல்வராஜ், தொழிலாளர் அணி துணைச் செயலாளர்கள்-பிடிசி வெ.பாலு, இராஜா குப்புசாமி, கொல்லாபுரம் இராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
திமுக சட்டதிட்டத்தில், திமுக துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதியின்படி அமைப்புசாரா ஓட்டுநர்களின் நலன் கருதி, தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி எனும் புதிய துணை அமைப்பும்; தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறையை மேம்படுத்திட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணிகளுக்கு மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் தலைவர்-டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., அமைப்புச் சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ டி.செங்குட்டுவன், அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் துணைச் செயலாளர்கள்-டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ பணப்பட்டி கே.தினகரன், நாகர்கோவில் எம்.சிவராஜ், பொன்னேரி ஏ.ஆர்.டி.உதயசூரியன், விஷ்ணு பிரபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர்-தயாநிதி மாறன்
எம்.பி நியமிக்கப்படுகிறார்.
மேலும் செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகள் கலைப்பு: புதியமாவட்ட தலைவராக தரணி. R. முருகேசன் நியமனம்
ஒரே மேடையில் பாஜக எம்பி, எம்எல்ஏவுடன் பலாத்கார குற்றவாளி: திரிணாமுல் எம்பி காட்டம்
வாரிசு அரசியலை எதிர்க்கும் நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் மகளுக்கு பாஜகவில் முக்கிய பதவி
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போலவே கருப்பு உடையில் வந்த பாஜ பெண் எம்எல்ஏ
ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி... டிஎன்பிஎஸ்சி அதிகாரியிடம் விளக்கம் கேட்பு : அமைச்சர் பழனிவேல் தியாகவேல் விளக்கம்!!
ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்