சமூக நீதிக்கான மாநிலத்தில் சனாதனத்திற்கு இடமில்லை அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 2வது இடம் பிடிக்க பாஜ முயற்சி: திருமாவளவன் பேட்டி
2022-11-28@ 00:57:23

கோபி: அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடிக்க பாஜ முயற்சி செய்கிறது, சமூக நீதிக்கான மாநிலத்தில் சனாதனத்திற்கு இடமில்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கள்ளிப்பட்டிக்கு நேற்று வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அங்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜ வளர்கிறது அல்லது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பக்கூடிய ஒரு செயல் திட்டமாக இருக்கிறது. அவர்கள் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2வது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பகிரங்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஊடக அரசியலை அவர்கள் உயர்த்தி பிடிக்கிறார்கள்.
அதாவது பாஜ இங்கு வலுவாக உள்ளது போன்ற தோற்றத்தை காட்டுகிறார்கள். இது வெறும் தோற்றம்தான். தமிழ்நாடு என்பது சமூக நீதிக்கான மாநிலம். சனாதனத்திற்கு இடமில்லை. பாஜவினர் அப்பாவி இந்துக்களை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பாஜ உள்ளிட்ட சங்பரிவாரின் சனாதான அரசியலை அம்பலப்படுத்துவோம். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்து சமயத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.
இதை எல்லாம் அவர்கள் தமிழக அரசியலில் 2வது இடத்தை பிடிப்பதற்கான அரசியல் யுக்திகள். இந்த யுக்தி இங்கு எடுபடாது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை. அது கடந்த தேர்தலுடன் கலைந்து விட்டது. சிதறிவிட்டது. ஆனால் இங்கே கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து வலுவோடு இருக்கிற அணிதான் திமுக தலைமையிலான கூட்டணி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
மாணவர்களின் நலன் கருதி முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. 57.1% பேர் பாஜக ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்!!
ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா
சொல்லிட்டாங்க...
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!