‘கடின முடிவு எடுக்க கட்சி தயங்காது’கெலாட்- பைலட்டுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
2022-11-28@ 00:29:52

இந்துார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், ‘கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’ எனக்கூறி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் பைலட்டை துரோகி என்று கெலாட் கூறினார். அதற்கு பதிலடியாக, என் மீது அவதுாறாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று பைலட் கூறினார்.
தற்போது மபியில் ராகுல் காந்தி எம்பி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் 4ம் தேதியில் இருந்து ராஜஸ்தானில் அவர் நடைபயணம் துவங்குகிறார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெயராம் ரமேஷிடம் இது பற்றி கேட்ட போது, ‘‘ராஜஸ்தானில் கட்சி பிரச்னைக்கு முறையான தீர்வு காண கட்சி தலைமை முயன்று வருகிறது. கட்சி அமைப்பு எங்களுக்கு முக்கியம். இரண்டு பேருக்கும் சமரசம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தால் அதையும் செய்வோம். தேவைப்பட்டால் கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!