SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கு; ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் பதிவு

2022-11-28@ 00:29:40

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் ெதாடர்புடைய ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 15ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று முன்தினம் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாக்குலின்
பெர்னாண்டஸ் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன்மீதான வழக்கு தொடர்பாக சில தகவல்களை காவல்துறையிடம் தெரிவிக்க விரும்புவதாக சொன்னார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டசின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பித்து செல்ல முடியாது. வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 12ம் தேதிக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்