அமீரக தேசிய தினத்தை ஒட்டி தமிழ் அமைப்பு சார்பில் துபாயில் வாகன பேரணி
2022-11-27@ 20:56:54

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் பிரமாண்டமான பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இப்பேரணியில் 51 குழந்தைகள் அமீரகத்தின் தேசிய கொடியுடன், 51 சைக்கிள், 51 பெண்கள், 51மீட்டர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடியேந்தி 51 வாகனங்களின் அணிவகுப்புடன் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக அமீரகத்தைசேர்ந்த ஸாலிம் பின் அவாத் அல் காதிரி, மற்றும் மலையாள நடிகை ஷீலா பிந்து, பால் பிரபாகர், அரவிந்த், குழும நிறுவனங்களின் நிறுவனர், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மக்கள் ஆர்.ஜே சாரா, மரிக்கா, கே.வி.எல்.கமால், அறிவோம் தெளிவோம் ஆர்.ஜே மோனிகா டிக்டாக் பிரபலங்கள், துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் சேக், ஹாஜா அலாவுதீன் உள்ளிட்டோரும் மற்றும் அருணா மொழில், ஆண்ட்ரோ, கருவாயன், கல்ப் கட்ஸ் பிரவின், துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ், அயாஸ், ஜனனி, மற்றும் புல்லிங்கோ குழுவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா கூறுகையில்; இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் எனவும் மேலும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த ஆதரவாளர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள் என மகிழ்வுடன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி