SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டதாரி, முதுநிலை பணி நிரவல் ஆசிரியர்கள் கலந்தாய்வு 9ம் தேதிக்கு திடீர் மாற்றம்

2022-11-27@ 11:29:36

நெல்லை: பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை (28ம் தேதி)  நடைபெற இருந்த பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களை முன்னிட்டு டிச.9ம்  தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 29ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில்  மாற்றம் இல்லை. நடப்பு கல்வியாண்டில்  (2022-23) 1.8.22 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டு உள்ளது.

இதன்  அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி, முதுகலை  ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் நிரப்ப தகுந்த காலிப்பணியிடம்  கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் நாளை (28ம் தேதி) பட்டதாரி  ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை (28ம் தேதி) நடைபெற இருந்த  கலந்தாய்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு,  இதற்குப் பதிலாக டிசம்பர் 9ம்  தேதி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரவித்துள்ளார். அதே  நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி 29ம் தேதி முதுநிலை பட்டதாரி  ஆசிரியர்களுக்கும் எமிஸ் இணையதளம் மூலமாக கலந்தாய்வு நடக்கிறது. இதில்  மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்