வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்
2022-11-27@ 00:25:44

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வடசென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய புதிய இலச்சினை அறிமுகம்
ரயில் மோதி வாலிபர் பலி
பயண அட்டை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த அனுமதி: நிர்வாகம் தகவல்
சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி 11வது பட்டமளிப்பு விழா
ஓட்டலில் வரிந்துகட்டி சாப்பிடும் அசைவ பிரியர்கள் உஷார் பல நாடுகள் தடைவிதித்த மீன்கள் ‘பிஷ் பிங்கர்’ பெயரில் விற்பனை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி