மகள் கொடுமை தாங்க முடியலை கருணை கொலை செய்ய உதவுங்கள்: தேனி கலெக்டரிடம் மூதாட்டி மனு
2022-11-27@ 00:04:59

தேனி: மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்யக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காலனியில் வசிப்பவர் பெருமாள் மனைவி பாக்கியலட்சுமி (62). இவர் நேற்று தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணமாகி விட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்து விட்டார். 2வது மகளின் கணவர் இறந்து விட்டார். இதனால் அவர், வேறு ஒரு நபருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருகிறார். நான் வருமானத்துக்காக தனியார் பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறேன்.
சிவனடியாராகவும் இருந்து வருகிறேன். என்னை இறைவழிபாடு செய்ய விடாமல் 2வது மகளும், அவருடன் உள்ள நபரும் தடுக்கின்றனர். மேலும், எனது 3 பவுன் செயினை எடுத்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். எனக்கு சொந்தமான வீட்டை, ஆதரவற்றோருக்கு வழங்குவதுடன், என்னையும் கருணை கொலை செய்து கொள்ள உதவுமாறு மனுவில் தெரிவித்துள்ளேன். இவ்வாறு கூறினார். பெற்ற மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்ய சொல்லி கலெக்டரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!