கலவை பேருந்து நிலையத்தில் காலாவதியான பொருட்களை விற்ற பேக்கரி உரிமையாளருக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை
2022-11-26@ 14:20:43

கலவை : கலவை பேருந்து நிலையத்தில் காலாவதியான பொருட்களை விற்ற பேக்கரி கடை உரிமையாளருக்கு சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா உட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என கடைகளில் நேற்று திமிரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், தலைமையில் சுகாதார ஆய்வாளர் அருண், சூரியராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, பேருந்து நிலையத்தில் பங்கடை அருகே புகைப்பிடிக்க அனுமதித்த கடை உரிமையாளர்களுக்கு தலா ₹100 வீதம் ₹700 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து பொதுமக்கள் சிலர் சுகாதாரத்துறையிடம் பல்வேறு கடை மற்றும் பேக்கரிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறினர்.
இதையடுத்து, திமிரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அருண், சூரிய ராஜ் ஆகியோர் கலவை பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி கடைக்குச் சென்று பல பொருட்களை எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் காலாவதியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர், பேக்கரியில் காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் தொடர்ந்து. இதேபோல் பொருட்களை விற்றால் கடைக்கு சீல் வைக்க நேரிடும் என எச்சரித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் அடிக்கடி சோதனை செய்வதில்லை, அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே அதிகாரிகள் இப்பகுதிக்கு வருகின்றனர். மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருப்பதால் அதிகாரிகள் வருவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!