முதியவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் 20 மீட்டர் தூரத்திற்கு பறந்து தென்னை மரத்தில் மோதிய கார்-கும்பகோணம் அருகே பரபரப்பு
2022-11-26@ 12:29:10

கும்பகோணம் : கும்பகோணம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால், 20 மீட்டர் தூரத்திற்கு பறந்து தென்னை மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (34). இவரது மனைவி சிவானி (29). பெங்களூரை சேர்ந்தவர் மோகன் (34). இவரது மனைவி பூவிழி (28). நண்பர்களான இந்த இரண்டு தம்பதியினரும் பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று காலை தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் மதியம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயிலுக்கு கும்பகோணம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை கிருஷ்ணா ஓட்டி வந்துள்ளார். அப்போது கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி கடைவீதியில் நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது அகராத்தூர் ஊராட்சி கொத்தவாசலை சேர்ந்த சண்முகம் (70) என்பவர் சாலையின் குறுக்கே சென்றுள்ளார்.
அப்போது காரை வேகமாக ஓட்டி வந்த கிருஷ்ணா, முதியவர் சண்முகம் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், 20 மீட்டர் தூரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து சோழபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!