அமெரிக்காவிடம் இந்தியா உஷாராக இருக்க வேண்டும்: முன்னாள் ராணுவ தளபதி எச்சரிக்கை
2022-11-26@ 00:27:51

புதுடெல்லி: ‘அமெரிக்காவிடம் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என முன்னாள் ராணுவ தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார். எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.
இதில், முன்னாள் இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் பேசுகையில்:
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை. குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உடனான தனது உறவை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது. எப்போதும் அமெரிக்காவுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில், அமெரிக்கா ஒருபோதும் நட்பு நாடுகளுடன் நம்பகமானதாக இருந்தது இல்லை. முதலில் வியட்நாம் போரில் இருந்து அமெரிக்கா விலகி கொண்டது. பின்னர், ஈராக்கில் இருந்து 2 முறையும், தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்தும் விலகிக் கொண்டது. வெளிநாடுகளில் நடந்த அமெரிக்காவின் ராணுவ தலையீடுகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன,’’ என்றார்.
மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!