பண மதிப்பிழப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்துக்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு
2022-11-26@ 00:26:49

புதுடெல்லி: ‘ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எந்த நோட்டையும் பண மதிப்பிழப்பு செய்வதற்கான அதிகாரம் அரசு உள்ளது என்றும், இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது ’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. மாறாக ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணை நடந்தது.
மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான வக்கீல் சியாம் திவான் கூறுகையில், ‘பண மதிப்பிழப்பு குறித்து போதிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 86.4 சதவீத பணத்தை நீக்கி விடுகிறீர்கள். அதற்கு முன் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மனிதர்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் பற்றி பேசுகிறோம். இதனால் 1.2 கோடி பேர்கள் வேலை இழந்தனர்’’ என்றார்.
அப்போது நீதிபதி அப்துல் நசீர், ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்திய பின்னர்தான் ஒன்றிய அரசு இந்த நடவடிக்கை எடுத்ததா? என்று கேட்டார். அதற்கு அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி பதிலளிக்கையில், ‘அரசு எடுத்த கொள்கை முடிவை பற்றி நீதிமன்றம் மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி சட்டம் 26(2) ன் கீழ் பண மதிப்பிழப்பு குறித்து அரசாணை வெளியிட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 5ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கோரிய ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!