அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ உறுதி
2022-11-26@ 00:25:48

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தைத் தகர்க்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசின் முயற்சிகளை முறியடிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் சாசன தினமான நவம்பர் 26ம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசியல் சட்ட நாளான நவம்பர் 26ம் நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பாஜ அரசு, யு.ஜி.சி மூலம் அறிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசின் கடந்த 8 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.
எனவே, அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையதின் முயற்சிக்கு வைகோ கண்டனம்
மாணவர்களின் நலன் கருதி முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. 57.1% பேர் பாஜக ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்!!
ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!