SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே குதிரை பேரத்தில் இறங்கியது பாஜக; இமாச்சல் காங். தலைவர் ஆவேசம்

2022-11-25@ 16:49:27

சிம்லா: வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக குதிரை பேரத்தில் பாஜக இறங்கியுள்ளதாக இமாச்சல் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் கூறினார். இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் பாஜக தலைமை குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஜ்னீஷ் கிம்தா கூறுகையில், ‘இமாச்சல் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு முன்பாக ஆளும் பாஜக குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது.
 
சில தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது. பல மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்துள்ளது. அக்கட்சி குதிரை பேரம் மூலம் தனது  அரசை அமைத்துள்ளது, ஆனால் இமாச்சல பிரதேசத்தில் அப்படி எதுவும்  நடக்காது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் இடங்களில் பாஜக பிரச்னைகளை கிளப்பி வருகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் வலுவான எதிர்ப்பை காட்டி வருகின்றனர். எங்களுக்கு யார் மீது நம்பிக்கை இல்லை என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதும் கண்காணிப்பதும் காங்கிரசின் பொறுப்பாகும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்