இயற்கை முறையில் விளையும் தேவாரம் காய்கறிகளுக்கு கேரளாவில் ‘மவுசு ஜாஸ்தி’
2022-11-25@ 14:25:50

*விலை அதிகரிப்பால் விவசாயிகள் ‘குஷி’
தேவாரம் : தேவாரம் பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு கேரளாவில் மவுசு அதிகரித்துள்ளது.தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் ெபரும்பாலான பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேவாரம் பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மவுசு அதிகம். அதனால், தேவாரம் பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பாக உத்தமபாளையம், கம்பம், கூடலூர், தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட ஊர்களில் மாலை அணிவித்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர். 41 நாட்கள் 60 நாட்கள் என விரதம் இருந்து சபரிமலை சென்று ஐயப்பன் கோயிலில் தரிசிப்பது வழக்கம். இந்நாட்களில் காய்கறிகளை அதிகம் உணவுகளில் சேர்ப்பது வழக்கம். தேவாரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து அதிகமான அளவில் தேனி, மதுரை, மட்டும் அல்லாமல் அதிகமான அளவில் காய்கறிகள் கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. கத்தரிக்காய், முருங்கை, வெண்டைக்காய், பொ புடலங்காய், பீர்க்கங்காய், தக்காளி, பாகற்காய், பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகள் தினந்தோறும் அதிகளவில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது: தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயம் அதிகரித்துள்ளது.
தேவாரம் பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. சபரிமலை சீசன் என்பதால். விவசாயம் செய்யப்பட்டுள்ள காய்கறிகளுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இந்த வருடமும், தற்போது காய்கறிகள் தேவை அதிகம் உள்ளதால் கேரளாவுக்கு அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. தேவையை அதிகரிப்பதால் இனி வரும் காலங்களில் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது’’ என்றனர்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!