இந்தியாவில் அமேசான் அகாடமி என்ற பெயரில் இயங்கி வரும் ஆன்லைன் கல்வி தளத்தை மூட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு
2022-11-25@ 11:41:28

டெல்லி: இந்தியாவில் அமேசான் அகாடமி என்ற பெயரில் இயங்கி வரும் ஆன்லைன் கல்வி தளத்தை மூட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியாவில் மின்னணு வர்த்தகம் மட்டுமின்றி பல்வேறு தொழில்கள் மற்றும் சேவைகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உயர்கல்வி மாணவர்களுக்கான அமேசான் அகாடமி ஆன்லைன் தளம் கொரோனா காலகட்டமானா கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஐஐடி நுழைவு தேர்வு, நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வழங்கி வந்த அமேசான் அகாடமி திடீரென மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஆகஸ்டில் அமேசான் அகாடமி மூடப்படும் எனவும் ஆன்லைனில் உள்ள பயிற்சி ஆவணங்களை 2024 வரை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மூடும் நடவடிக்கை இருக்கும் என அமேசான் கூறியுள்ளது.
ஆன்லைன் கல்வி சேவையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக வந்த பைஜுஸ், வேதாந்து உள்ளிட்டவை செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் அமேசான் அகாடமி இந்தியாவை விட்டே வெளியேறுகிறது.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்
புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
old polluted மாற்றம் என்று கூறுவதற்கு பதில் old political மாற்றம் என்று நிதியமைச்சர் கூறியதால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு; புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!