SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் மரணம்: கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலி

2022-11-25@ 02:38:25

ஆலந்தூர்: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஆலந்தூர் 165வது வார்டு மாமன்ற உறுப்பினருமான நாஞ்சில் பிரசாத் (56), உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு சுதா என்ற மனைவி, காவியா, அனன்யா என 2 மகள்கள் உள்ளனர். நாஞ்சில் பிரசாத்தின் உடல் ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், பகுதி செயலாளர் பி.குணாளன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு, கவுன்சிலர்கள் ஜெ.கே.மணிகண்டன், சாலமோன் செல்வேந்திரன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், தேவி யேசுதாஸ், அமுதபிரியா செல்வராஜ், பகுதி நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன், முரளி கிருஷ்ணன், எம்.ஜி.கருணாநிதி, வழக்கறிஞர் ஆனந்தகுமார், சேது செந்தில், உள்ளகரம் ஜி.செந்தில், சதாசிவம் ஆகியோர் நாஞ்சில் பிரசாத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி, பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவரது துணைவியார் வரலட்சுமி, விஜய்வசந்த் எம்பி, ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், திரவியம், செந்தில்குமார், சுந்தரமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன், பிராங்கிளின் பிரகாஷ், ஏ.வி.தனசேகரன், ரோமியோ, மோகன்குமார், மோகனரங்கம், முரளி, தளபதி பாஸ்கர், ஆர்.ஜி.பகத்சிங் பன்னீர்செல்வம், கனி, பாண்டியன், விவேக், கீதாஜனார்த்தனன், ஆலிஸ் மனோகரி, எம்.ஜி.மோகன், ஐயம்பெருமாள், கோகுல கிருஷ்ணன், லயன் வி.காமராஜ், எம்பி நேரு, ரோஜா, ஆதம் பிரகாஷ், சிவமுருகன், ஆர்.வி.ஆர்.அருள், சந்தானம், ஆவின் ஆனந்தன், கஜபதி, முன்னாள் கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், நரேஷ்குமார் மற்றும் லோகேஷ், வியாபாரிகள் சங்க நலச்சங்க பிரமுகர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் இன்று (25ம் தேதி) காலை 10 மணிக்குஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம் மின்சார எரி மேடையில் தகனம் செய்யப்படுகிறது.

கே.எஸ்.அழகிரி இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாஞ்சில் பிரசாத் உயிரிழந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கட்சி பணிகளில் அயராது உழைத்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்