இந்தோனேசியா நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு
2022-11-25@ 02:16:14

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்து உள்ளது.
150 பேர் மாயமாகி உள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. குகநாங் துணை மாவட்டத்தில், நக்ராக் கிராமத்தில் நடந்த தேடுதல் பணியில், இடிபாடுகளில் சிக்கிய அஜ்கா மவுலானா மாலிக் என்ற 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான். எனினும், இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்து விட்டார். அவரது உடல் அருகிலேயே சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் பெற்றோரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!