அதிமுக ஆட்சியின்போது சிமென்ட் நிறுவனத்தில் 100 கோடிக்கும் மேல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த கோரி மனு: ஊழல் கண்காணிப்பு துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
2022-11-25@ 00:07:01

சென்னை: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில், ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்களின் வரிப்பணத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில், கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவன பதவி உயர்வு உள்ளிட்டவைகளிலும் விதி மீறல் நிகழ்ந்தது.
கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான இ டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த முறைகேடு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ஊழல் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Tags:
AIADMK government cement company more than 100 crores malpractice investigation petition அதிமுக ஆட்சி சிமென்ட் நிறுவன 100 கோடிக்கும் மேல் முறைகேடு விசாரணை கோரி மனுமேலும் செய்திகள்
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAIக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்.!
தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன: தமிழ்நாடு சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மது அருந்தாதவரை மது அருந்தியதாக காட்டிய பிரீத் ஆனலைசர் மிஷின்: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!