கேரளாவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை: கல்வித்துறை அறிவிப்பு!
2022-11-24@ 17:46:51

திருவனந்தபுரம்: கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை கல்வித்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது.
மேலும் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் என்றும் மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கேரள பொதுக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் 2023-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. மேலும் பன்னிரண்டாம் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது. பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் என்றும் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
ஹாலிவுட் நடிகை மரணம்
விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது
அமெரிக்க தலைமை தளபதியை சந்தித்தார் அஜித் தோவல்: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!