அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடு வழக்கு: ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
2022-11-24@ 16:04:47

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தொழில்துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக 2018 - 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செல்வகுமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான மின்னணு டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதால் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டரில் குறிப்பிட்ட தொகையை மீறி அதிகப்படியான தொகைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் மற்ற சிமெண்ட் நிறுவனங்களிடமிருந்து வாங்கி சலுகை விலையில் சிமெண்ட் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் அதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளை நிர்வகிப்பதற்கு தகுதியில்லாதவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து பட்டியலிட்டு ஊழல் கண்காணிப்பு துறையிடம் புகார் அளித்ததாகவும் ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!