நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!
2022-11-24@ 10:58:31

இந்தூர்: இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில், பாதயாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் என தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.
இன்று 78வது நாளாக மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்; நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இன்று யாத்திரையின் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியின தலைவருமான தன்தியாபீ நினைவிடத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார்கோன் செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்
புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
old polluted மாற்றம் என்று கூறுவதற்கு பதில் old political மாற்றம் என்று நிதியமைச்சர் கூறியதால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு; புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!