முட்டிபோட்டு சென்று மனு அளித்த 12 காங். கவுன்சிலர்கள்: பிரதமர் மோடி தொகுதியில் பரிதாபம்
2022-11-23@ 15:58:19

வாரணாசி: சிக்ரா நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்காக முட்டிபோட்டு ஊர்ந்து வந்து 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி எம்பி தொகுதிக்கு (பிரதமர் மோடியின் தொகுதி) உட்பட சிக்ரா நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டிபோட்டு ஊர்ந்து வந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டில் மட்டும் எங்களது பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் அரசு ஒதுக்கியது. ஆனால் இதுவரை எவ்வித பணியும் தொடங்கவில்லை. உரிய நேரத்தில் பணிகள் தொடங்கவில்லை என்றால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணம் மீண்டும் திரும்பி சென்றுவிடும். இதுவரை வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் கூட கோரப்படவில்லை.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒதுக்கப்பட்ட நிதி பயன்பாடின்றி திரும்ப செல்ல வாய்ப்புள்ளது. இதனால் கவுன்சிலர்களாகிய எங்களுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவிடும். அதனால் நூதன முறையில் போராட்டம் நடத்தி மனு அளித்துள்ளோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா
சொல்லிட்டாங்க...
நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!
சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!