திருச்சானூரில் 3வது நாள் வருடாந்திர பிரமோற்சவம் முத்துபந்தல் வாகனத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு-இன்று கற்பகவிருட்ச வாகனம்
2022-11-23@ 12:11:05

திருமலை : திருச்சானூரில் 3வது நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் நேற்று முத்துபந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 4வது நாளான இன்று கற்பகவிருட்ச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தையொட்டி வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறும். அதன்படி, இந்த பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமோற்சவத்தின் முதல் நாளான கடந்த 20ம் தேதி சின்ன சேஷ வாகனம், பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று முன்தினம் காலை ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்று காலை முத்துபந்தல் வாகனத்தில் தாயார் நாரை வடிவில் வந்து பகாசுரன் எனும் அரக்கனை வதம் செய்யும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் கோவிந்தா?, கோவிந்தா? என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில் சுவாமி வீதி உலா வந்தனர். குதிரைகள், காளைகள் மற்றும் யானைகள் வீதி உலாவிற்கு முன்பு அணிவகுத்து சென்றது.
வீதியுலாவில் ஒவ்வொரு அடியிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனம் உருகி தாயாரை வழிபட்டனர். வெண்ணிற முத்துக்களால் அமைக்கப்பட்ட பந்தலில் தாயார் எழுந்தருளியதை காணும் பக்தர்களின் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியாக மாறும் என்பது நம்பிக்கையாகும். வீதி உலாவை தொடர்ந்து மதியம் கோயில் வளாகத்தில் கிருஷ்ண சுவாமி மண்டபத்தில் தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவையும், இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏழுமலையான் கோயில் ஜீயர்கள், சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவிரெட்டிபாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் போகலா அசோக்குமார், இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம், ஆகம ஆலோசகர் ஸ்ரீனிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.பிரமோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை கற்பகவிருட்ச வாகனம், இரவு அனுமந்த வாகனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 5ம் நாளான நாளை காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி