47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குள் நடத்த வேண்டும்: சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்தூரி தலைமையில் ஆலோசனை
2022-11-23@ 01:39:13

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சிறப்பாக நடத்திடும் வகையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது டிசம்பர் 2-வது வாரத்திற்குள் முடித்து தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை:
47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023-ஐ மிகச்சிறப்பாக நடத்திடும் வகையில், அரசின் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர்அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் 22.11.2022 அன்று நடைபெற்றது.
ஆலோசனையின் போது பல்வேறு அரசுத்துறை அரங்குகள் அமைப்பதற்கான பணிகளை டிசம்பர் 2-வது வாரத்திற்குள் முடித்து, பொருட்காட்சி தொடக்க விழா நடத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அறிந்து கொள்ளும் வண்ணம் அந்தந்த துறைகளின் அரங்குகளை புதுமையான முறையில் அமைத்திடுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்வாறு சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து ஐகோர்ட் உத்தரவு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொடர்பு வழியை கடந்து புகார் தெரிவிக்கும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை
அதிமுக நிர்வாகி கொலை வழக்கு குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!