SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவு இல்ல திட்டத்தில் பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு

2022-11-23@ 00:21:39

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்ல திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.  2022-2023ம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி.திலகவதி, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன், சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற  இரா.கலைக்கோவன், சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், 2016ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற கா.ராஜன், சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி.குருஸ், 2016ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற வண்ணதாசன் ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்