அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு மேகாலயா எல்லையில் 6 பேர் பலி
2022-11-23@ 00:20:51

கவுகாத்தி: மேகாலயா - அசாம் மாநிலங்களுக்கு இடையே மீண்டும் எல்லை பிரச்னை வெடித்தது. இருமாநில எல்லையில் அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அசாம் - மேகாலயா மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், சர்ச்சைக்குரிய எல்லை பகுதிகளில் அடிக்கடி இருமாநில போலீசார், மக்களுக்கு இடையே மோதல்கள் நடக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எடுத்த நடவடிக்கையால், இருமாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையல், இரு மாநில எல்லையான மேகாலயா மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கூறுகையில், ‘மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள முக்ரோ கிராமத்தில் ஒரு லாரியில் மரத்தை ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது, அசாம் வனத்துறையினரும், போலீசாரும் அந்த லாரியை சிறைபிடித்தனர். இதையறிந்த, அப்பகுதிகளை சேர்ந்த மேகாலயா மக்கள் அங்கு குவிந்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. அப்போது, அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேகாலயாவை சேர்ந்த பொதுமக்கள் 5 பேரும், அசாம் வனத்துறையை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.
அசாம் போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டை கடுமையாக கண்டிக்கிறேன்’ என்று கூறினார். இந்த மோதல் காரணமாக, இருமாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இருமாநில மக்களுக்கு இடையே மோதல் நடப்பதை தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து, இரு மாநில அரசுகளிடமும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. பதற்றம் நிலவுவதால் இருமாநிலத்தின் 7 மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கவுகாத்தி எல்லையை மேகாலயா போலீசார் மூடி உள்ளதால், வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் காத்து கிடக்கின்றனர்.
Tags:
Assam police firing Meghalaya border 6 people killed அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு மேகாலயா எல்லை 6 பேர் பலிமேலும் செய்திகள்
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஏப்ரல் 1 முதல் ரூ.2000-க்கு மேலான யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!