ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம்: ஆளுநரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டம்
2022-11-23@ 00:20:39

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட முன்வடிவு தொடர்பாக தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு அது சட்டமாக அமல்படுத்தப்படும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஆளுநர் அன்று மாலையே அனுமதி அளித்துவிட்டார்.
அவசர சட்டத்தில் இருக்கும் சரத்துக்கள் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் சட்ட மசோதாவிலும் இருக்கிறது. இதில் கேள்வி கேட்பதற்கான அல்லது சந்தேகம் எழுவதற்கான இடமே கிடையாது. அதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவுதான். இருந்தாலும், நாங்கள் அதுபற்றி வேறு கருத்துக்களை சொல்ல முடியாது. ஆளுநர் ஏன் அனுமதிக்காமல் வைத்திருக்கிறார் என்ற காரணத்தை சொல்ல முடியாது. ஆளுநரை சந்திப்பதற்காக நானும், உள்துறை செயலாளரும் நேரம் கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக நேரம் கிடைத்த பிறகு ஆளுநரை சந்தித்து இதுகுறித்து கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அவர் ஏதாவது சந்தேகங்களை கேட்டால், அந்த சந்தேகங்களை அவரிடத்தில் சொல்லி அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி செய்வோம். நிச்சயமாக இன்று அல்லது நாளை சந்திக்க அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புகிறோம்.
முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது, மற்ற தோழமை கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. திமுக அரசின் கருத்துக்கள், தமிழக அரசின் கருத்துக்களாகத்தான் இருக்கும். திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுவில், எல்லா கருத்துக்களும் ஒட்டுமொத்தமாக உள்வாங்கி நிச்சயமாக சிறப்பாக ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அன்றைக்கு பெறப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தை பொறுத்தவரைக்கும் மேல்முறையீட்டு மனு அதாவது சீராய்வு மனு வருகின்றபோது அதில் தமிழக அரசு தகுந்த வாதங்களை எடுத்து வைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய சட்ட பாதுகாப்புக்களை நாங்கள் செய்து தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Law Minister Raghupathi meets the Governor to ban online rummy ஆன்லைன் ரம்மி தடை ஆளுநரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதிமேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!