வாலாஜா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள்-சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி
2022-11-22@ 14:33:53

வாலாஜா : வாலாஜா பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கோழி இறைச்சி மற்றும் குப்பைக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜா அடுத்த தேவதானம் பகுதி உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் பிரதானமாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், தேவதானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் காற்று வீசும்போது அந்த குப்பைகள் சாலையின் நடுவே வருவதால் பைக்கில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே, தேவதானம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் தொடர்ந்து குப்பைக்கழிவுகளை கொட்டும் நபர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஏப்ரல் 4 ல் பங்குனி உத்திர தெப்போற்சவம்; குளித்தலை அய்யர்மலை கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்: தெப்போற்சவ மண்டபத்தில் வர்ணம் பூசப்பட்டது
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!