ரோஜ்கர் மேளாவில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு 71,056 நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் மோடி உரை
2022-11-22@ 12:39:09

டெல்லி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து ஒன்றிய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார். இந்தநிலையில், ஒன்றிய அரசின் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெற்றது. அதில், காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் உலக வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பால் இளைஞர்கள் பலன்களை பெறுகின்றனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா தொற்று மற்றும் போரால் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் உலகம் முழுவதும் சுணக்கம் ஏற்பட்டது.
ஆனால் இந்த காலம் தான் இந்தியா தனது பொருளாதார பலத்தை நிருபிப்பதற்கான பொன்னான காலம் என பொருளாதார அறிஞர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். அமிர்த காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அந்த உறுதிமொழியை மெய்பிக்க நீங்கள் அனைவரும் தான் 'சாரதியாக' செயல்பட வேண்டும்.
தொற்றுநோய் மற்றும் போருக்கு மத்தியில் உலகம் முழுவதும் இளைஞர்கள் முன் புதிய வாய்ப்புகளின் நெருக்கடி உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட வல்லுநர்கள் ஒரு பெரிய நெருக்கடியை சந்தேகிக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில், பொருளாதாரத் திறனை வெளிப்படுத்தவும் புதிய வாய்ப்புகளை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒரு சிறப்பு சகாப்தத்தில் இந்தப் புதிய பொறுப்பைப் பெறுகிறீர்கள். நாடு அமிர்த காலில் நுழைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை குடிமக்களாகிய நாங்கள் எடுத்துள்ளோம். இந்தத் தீர்மானத்தை அடைய, நீங்கள் நாட்டின் 'சார்த்தி' ஆகப் போகிறீர்கள். நாட்டின் மற்ற மக்கள் முன்னிலையில் இந்தப் புதிய பொறுப்பை ஏற்கப் போகும் நீங்கள் அனைவரும் ஒரு வழியாக ஒன்றிய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறீர்கள் என்று ரோஸ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை
அம்ரித்பால் தலைமறைவான இடத்தில் இருந்து வீடியோ வெளியீடு: கடவுள் அருளால் தப்பித்து வருவதாக பேச்சு
அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!
தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது.... ஒரே நாளில் 14 பேர் பலி : ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!