கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் கூடுதலாக 17% சதவீதம் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்: உழவர் நலத்துறை தகவல்
2022-11-22@ 12:13:18

சென்னை: கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்வாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் உழவர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோடு 10.97 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். கடந்தாண்டு 20.22 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் 15ஆம் தேதிதக்குள் செய்துகொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து பெரும்பாலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் மறக்காமல் உடனடியாக சென்று பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்வாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று உழவர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது
Tags:
நிதியாண்டு நிதியாண்டு கூடுதல் 17% சதவீதம் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர் உழவர் நலத்துறை தகவல்மேலும் செய்திகள்
தஜிகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
காஞ்சிபுரத்தில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை!!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : கேரள அரசு உத்தரவு!!
ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
மார்ச்-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி
இந்திய அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவு: சுகாதாரத்துறை தகவல்
கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!