தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: தெற்கு ரயில்வேயிடம் கனிமொழி எம்பி மனு
2022-11-22@ 01:02:31

சென்னை: தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரியிடம் தூத்துக்குடி எம்பி கனிமொழி மனு அளித்தார். சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
குறிப்பாக, தூத்துக்குடியில் இருந்து தினசரி கோவைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்றும், மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் ‘லோக்மானியா ரயிலை’ தூத்துக்குடியில் இருந்து இயக்குமாறும், திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயங்கும் ‘பாலருவி எக்ஸ்பிரஸ்’ ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், 3 நடைமேடைகளுடன் இருக்கும் தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்பி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வழங்கினர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!